Headlines

மும்பை அணியின் தலைமை பதவியிலிருந்து ரோஹித் நீக்கம் – புதிய தலைவராக ஹர்திக் பாண்டியா நியமனம்!

Advertisements
உங்கள் விளம்பரங்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

❇️2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

❇️2013இல் இருந்து மும்பை அணி தலைவராக செயற்பட்டு வந்த ரோஹித் சர்மா தலைமை பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

❇️சில வாரங்களுக்கு முன் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார்

❇️இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி புதிய தலைவராக அறிவித்துள்ளது.

❇️இந்த மாற்றம் குறித்து மும்பை இந்தியன்ஸின் செயல்திறன் தலைவரான மஹேல ஜெயவர்தனே கருத்து தெரிவிக்கையில், “இது பாரம்பரியத்தை கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாகும். மேலும், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க வேண்டும் என்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தத்துவத்திற்கு உண்மையாக இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

❇️இதேவேளை குஜராத் அணியின் புதிய தலைவரான சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply