
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
நீரேந்துப் பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
கன மழை பெய்து வருவதால் எங்கு பார்த்தாலும் பனி மூட்டம் அதிகளவில் காணப்படுவதால் வாகன சாரதிகளை மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் வலய போக்குவரத்து பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சகல ஓடைகள் மற்றும் காட்டாறுகள் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.