Headlines

ஆபாசப் படங்களை பார்க்கும், பகிரும் நபர்களை இலகுவாக அடையாளம் காண கூகுள் நிறுவனம் இலங்கை பொலிஸாருக்கு அறிமுகப்படுத்திய புதிய முறை… ஒருவர் கைது.!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

12 வயது சிறுமி ஒருவரை 2 வருடங்களாக பாலியல்

 துஷ்பிரயோகம் செய்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் ஆபாசப் படங்களை பார்க்கும் மற்றும் பகிரும் நபர்களை இலகுவாக அடையாளம் காண கூகுள் நிறுவனம் இலங்கை பொலிஸாருக்கு அறிமுகப்படுத்திய புதிய முறையின் பிரகாரம் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் வசிக்கும் 18 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரின் உறவு முறை சிறுமியே இந்த இளைஞனால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த இளைஞன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து கூகுள் டிரைவில் பதிவேற்றியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கூகுள் வழங்கிய தொடர்புடைய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதல் கைது இதுவாகும்

Leave a Reply