Headlines

தனது 14 வயது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

தனது 14 வயதுடைய தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணனை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.ஏஸ்.ஏம்.ஏ.றஹீம் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் 24 வயது அண்ணன் தனது 14 வயதுடைய தங்கையை கர்ப்பமாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐந்து மாத கர்ப்பிணியான தங்கை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply