வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போது இலங்கையின் தெற்காக நிலைகொண்டுள்ளது.
இது மாலைதீவு கடற்பிராந்தியம் நோக்கி மேற்கு திசையில் நகர்வதன் காரணத்தினால் இலங்கையின் கிழக்கு மாகாணங்களில் அசாதாரண காலநிலை தொடரும்.
இந்த காற்று சுழற்சி காரணமாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மழை பெய்யும்.
நாளை (11) முதல் மழைக்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவாகவே உள்ளது. (பெரும்பாலும் 11ஆம் திகதி முதல் சில நாட்களுக்கு மழை இல்லை).
இதேபோன்று வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களில் மழைக்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
அதேவேளை வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று ஓரளவு மழைக்கு சாத்தியம் உள்ளது.
இதேவேளை எதிர்வரும் 23, 24, 25ஆம் திகதியளவில் மேலும் ஒரு காற்று சுழற்சியானது இலங்கையை நெருங்கி வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணத்தினாலும் இக்காலப் பகுதிகளில் ஓரளவு மழை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.