Headlines

16 வயதில் கூலி வேலைக்கு… தாயை கொடூரமாக கொன்ற மகன்! இலங்கையில் சம்பவம்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கண்டி – நாவலப்பிட்டி பிரதேசத்தில் தாயை மகன் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான இளைய மகன் கடந்த 20 ஆம் திகதி நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 67 வயதான எஸ்.செல்லம்மா என்ற இரு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சந்தேக நபர் தனது தாயை கடுமையாக தாக்கியதில் அவரது தலை பகுதியில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது விலா எலும்புகள் 22 துண்டுகளாக உடைக்கப்பட்டுள்ளதாகவும் மரண விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது தந்தையின் தலையில் கடுமையாக தாக்கியதில் காயமடைந்த தந்தை தனது மூத்த மகளின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சந்தேக நபர் கடந்த 17 ஆம் திகதி தனது மனைவியை தாக்கியதில் அவரது மனைவி குழந்தைகளுடன் தனது தாயின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, தாயுடன் வசித்து வந்த சந்தேக நபர், கடந்த 20 ஆம் திகதி அன்று தனது தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் 16 வயதிலேயே கூலி வேலைக்கு அனுப்பப்பட்டதாகவும், என்னை பற்றி எவரும் கவலைப்படவில்லை எனவும் கூறி தாயை தாக்கியுள்ளார். பின்னர் அவர் தனிப்பட்ட வேலை ஒன்றிற்காக நாவலப்பிட்டி பிரதேசத்திற்கு சென்று மதியம் 4 மணிக்கு வீடு திரும்பிய நிலையில் அவரது தாய் வீட்டிற்குள் உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார்.

இந்த நிலையில் சந்தேக நபர் இது தொடர்பில் பிரதேசவாசிகளிடம் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரிடம் தனது தாய் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில் மரண விசாரணையில் உயிரிழந்தவர் பலமாக தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபரான 41 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply