தென்னிந்தியாவின் பிரபல நடிகரான விஜய், அவரது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
விஜய் மக்கள் இயக்கம் பல ஆண்டுகளாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே.