ஹாங்காங் விமான நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் விமானம் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் ஜோர்டான் நாட்டை சேர்ந்த 34 வயது நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் லொறி ஒன்றில் இன்று பயணித்துள்ளார். பயணிகள் அமரும் பகுதியில் இருந்திருக்கிறார்.
அப்போது, அவர் லொறியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அவர் மீது விமானம் ஒன்று மோதி, அவரை இழுத்து சென்றுள்ளது. இதன்பின்பு, அவர் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் டாக்சிக்கள் செல்லும் வழியில் கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அவசரகால பணியாளர்கள் உடனடியாக அவரை மீட்டனர். இருப்பினும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார் என அறிவிக்கப்பட்டார்.
சீனா விமான சேவைக்கான நிறுவனத்தில் பராமரிப்பு மற்றும் அடிமட்ட பணியாளராக அவர் பணியாற்றி வந்துள்ளார் என ஹாங்காங் விமான நிலைய கழகம் தெரிவித்துள்ளது.
அந்த பணியாளர் வேலையில் இருந்தபோது, அவர் அணிந்திருந்த சீட் பெல்ட் கழன்றிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.