தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் இடம்பெற்ற சரிகமப இசை நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா மற்றும் மலையகத்தை சேர்ந்த அசானி ஆகியோர் ஜேர்மனியில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
ஜேர்மனியிலுள்ள Eventhalle Schwelm GmbH எனுமிடத்தில் குறித்த இசை நிகழ்வு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சரிகமப இசை நிகழ்வில் பங்கேற்ற இறுதிப்போட்டியாளர்களான ருத்ரேஷ் ,சஞ்சனா ,ரிக்ஷித்தா மற்றும் கனிஷ்கர் ஆகியோர் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.