Headlines

தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொன்ற கொடூர தாய்! திடுக்கிடும் சம்பவம்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது குழந்தையை தொட்டிலில் படுக்கவைப்பதாக நினைத்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கன்சஸ் நகரை சேர்ந்தவர் மரிகா தாமஸ் (வயது 26). இவருக்கு ஒருமாத பெண் குழந்தை உள்ளது. 

ந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை மரிகா தாமஸ் தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து உணவை சூடுபடுத்த பயன்படும் மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார்.

மைக்ரோவேவ் ஓவன் செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில் குழந்தையின் ஆடை மற்றும் குழந்தையை சுற்றிவைக்கப்பட்டிருந்த துணி வெப்பத்தால் கருகி எரிந்த புகை வாசனை வாசனை வருவது தொடர்பில் அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், வீட்டின் மைக்கோவேவ் ஓவனில் படுகாயங்களுடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக குழந்தையை மீட்டு பரிசோதித்தனர். ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply