Headlines

அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத கடும் பனிப்பொழிவு; 1000 விமானங்கள் ரத்து

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் அங்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது அமெரிக்காவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் பனிப்புயல் உருவாகி வலுப்பெற்றது.

இதனால் முக்கிய நகரங்களான நியூயார்க், பாஸ்டன், நியூபோர்ட் போன்றவற்றில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.

அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத கடும் பனிப்பொழிவு; 1000 விமானங்கள் ரத்து | Heavy Snowfall In Us In Last 2 Years

1000 விமானங்கள் ரத்து 

இந்த பயங்கர பனிப்பொழிவு காரணமாக வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியை கடந்தது

. இதனால் முக்கிய நகரங்களில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சாலைகளில் பனித்துகள்கள் மலைகுவியல் போல் குவிந்ததால் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று ஒரேநாளில் அதிகபட்சமாக மாசாசூட்சின் பாஸ்டன் நகரில் 20 செ.மீ அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பனிப்புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பென்சில்வேனியா மாகாணத்தில் நிலவிய கடுமையான பனிப்புயல் காரணமாக மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் 2 லட்சத்திற்கு அதிகமானோர் வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டது.

இதனால் பள்ளி மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகள் ரத்தாகின. பயங்கர பனிப்புயல் காரணமாக மாகாணங்களின் பல்வேறு இடங்களில் சாலை விபத்துகளில் பலர் படுகாயம் அடைந்தனர்.

Leave a Reply