மெரிக்காவில் 2 வது முறையாக டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாவதை விட ஜோ பைடன் ஜனாதிபதியாக வருவதையே ரஷ்யா விரும்பும் என அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
அங்கு மேலும் அவர் தெரிவித்தாவது,
‘ஜோ பைடன் நீண்ட அனுபவம் உடையவர் மட்டுமல்ல, அவர் நடவடிக்கைகளை எளிதில் யூகிக்க கூடியவை. அவர் கடந்த காலத்து அரசியல் சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகளை கொண்டவர்.
ஆனால், டொனால்ட் டிரம்ப் அவ்வாறு அல்ல. டிரம்பை பிறரால் புரிந்து கொள்ளவோ அல்லது அவரது நடவடிக்கைகளை யூகிக்கவோ முடியாது.
நேட்டோவில் அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்பில் டிரம்ப் கொண்டிருக்கும் சிந்தனைகளில் நியாயம் உள்ளது. இருப்பினும், முடிவு செய்ய வேண்டியது அமெரிக்காவின் பொறுப்பு.
எனினும், அமெரிக்காவில் யார் ஜனாதிபதியாக பதவி ஏற்றாலும் அவர்களுடன் ரஷ்யா இணைந்து பணியாற்றும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
இதேவேளை, ஜோ பைடனின் உடல் ஆரோக்கியம் தொடர்பிக் நான் பேசுவது முறையாக இருக்காது.

எனினும், 2021ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் பைடனை நான் சந்தித்த போது அவர் நலமாகத்தான் இருந்தார்.
” மேலும், ஜோ பைடனின் உடல்நலம் தொடர்பில் கருத்து தெரிவிக்க நான் வைத்தியர் அல்ல. என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.