வவுனியவில் கிணறொன்றில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்றையதினம் (16-02-2024) காலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் குடும்பத்திற்குள் ஏற்பட்ட வாய் தர்க்கத்தையடுத்து இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
இதனையடுத்து, மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை அழைத்து மீட்க முயற்சித்தனர். இருப்பினும் அவர் அப் பகுதி மக்களின் துணையுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.