Headlines

காசா மக்கள் வருவதை தடுக்க சுவர் எழுப்பும் எகிப்து

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

இஸ்ரேல் காசா மோதல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் காஸாவிலிருந்து வரும் பாலஸ்தீன அகதிகளின் வருகையைத் தடுக்க எகிப்து தனது எல்லையில் சுவர் எழுப்பி வருகிறதாக கூறப்படுகின்றது.

பாலஸ்தீன நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் எகிப்தின் சினாய் தீபகற்பப் பகுதியில் குடியேறி வருகின்றனர்.

காசா மக்கள் வருவதை தடுக்க சுவர் எழுப்பும் எகிப்து | Egypt To Build Wall To Keep Gazans Out

இந்நிலையில் அகதிகளின் வருகையைத் தடுக்கும் வகையில் எகிப்து சுவர் எழுப்பி வருகின்றது. அதன்படி எகிபுது தனது எல்லைப் பகுதியில் 23 அடி உயரத்திற்கு பிரமாண்ட சுவரை எகிப்து எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் காசா மக்கள் வருகையை தடுக்க எகிப்தின் சுவர் கட்டும் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply