கனடியர்கள் வரிச் சலுகைகளை எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்க அதிகரிப்பு போன்ற காரணிகளினால் கனடியர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தனர்.
வரிச் செலுத்தக் கூடிய வருமானத்திற்கு அமைய வரிச் செலுத்த வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள், சுயதொழில், நீண்ட தூரம் பயணம் செய்வோர், சிறுவர் நலன் திட்டம், வீடு கொள்வனவு, வகுப்புக் கட்டணம் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வரிச் சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வரி அறவீடு செய்வது குறித்த தீர்மானங்களை மாகாண அரசாங்கம் எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.