Headlines

நாளைய தினம் விடுதலையாகும் தாய்லாந்தின் முன்னால் பிரதமர்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

பாங்காக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா நாளை(18.02.2024) விடுதலை செய்யப்படுவார் என தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தெரிவித்தார்.

ஷினவத்ரா கடந்த 2001 முதல் 2006 வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்தார்.

சர்ச்சைக்குரிய அரிசி மானிய திட்டத்தின் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய வழக்கில் தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு சிறைத் தண்டனை விதித்தது.

நாளைய தினம் விடுதலையாகும் தாய்லாந்தின் முன்னால் பிரதமர் | Formerthai Primeminister Thaksin Released Tomorrow

இந்த வழக்கில் சிறைத் தண்டனையிலிருந்து தப்புவதற்காக, 15 ஆண்டுகள் வெளிநாட்டிலிருந்து கடந்தாண்டு நாடு திரும்பினார் தக்சின்.

பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2023 முதல் அவர் காவலில் வைக்கப்பட்டார்.

நாளைய தினம் விடுதலையாகும் தாய்லாந்தின் முன்னால் பிரதமர் | Formerthai Primeminister Thaksin Released Tomorrow

குறைக்கப்பட்ட சிறைத்தண்டனை 

இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக பாங்காக் சிறையிலிருந்து ஆறு மாதங்கள் மருத்துவமனை காவலில் வைக்கப்பட்டார்.

அவரின் உடல் நலக் குறைபாடு காரணமாக எட்டு ஆண்டு சிறைத் தண்டனையை மகா வஜிரலோங்கோர்ன் மன்னர் ஓராண்டாகக் குறைத்தார்.

Leave a Reply