Headlines

10 வயதான சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை! தமிழர் பகுதியில் நடந்த கொடூரம்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

மன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டபட்டுள்ளார்.

குறித்த சம்பவம் 15/02/2024 இடம்பெற்றுள்ளது.

மேலும் இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், மன்னார் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

சம்பவம் 

மேற்படி சந்தேக நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையான நிலையில் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.

10 வயதான சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை! தமிழர் பகுதியில் நடந்த கொடூரம் | The Girl Was Killed Due To Improper Treatment

இந்நிலையில், அருகில் இருக்கும் தாய் ஒருவர் குறித்த சந்தேக நபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

இதனடிப்படையில், நேற்றைய தினம் மாலை உணவு வழங்கும் தாயின் பேத்தியான குறித்த சிறுமியை கடைக்கு அழைத்து சென்ற நிலையில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் சடலம்

இவ்வாறு அருகில் இருந்த சிசிரிவி கெமராக்களின் உதவியுடனும் ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின் போது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 வயதான சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை! தமிழர் பகுதியில் நடந்த கொடூரம் | The Girl Was Killed Due To Improper Treatment

இந்த நிலையில் மன்னார் காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply