Headlines

இத்தாலி பிரதமர் கனடாவிற்கு விஜயம்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

த்தாலிய பிரதமர்  ஜியோர்ஜியா மெலோனி கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதி அவர் கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக கனடிய பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு மெலோனி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதல் தடவையாக கனடாவிற்கு விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி பிரதமர் கனடாவிற்கு விஜயம் | Italian Pm Meloni To Visit Canada

உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு போர் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாற்றுப்பாலின சமூகம் தொடர்பில் மெலோனியின் நிலைபாடுகளை கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்தார். இந்த விமர்சனங்களினால் இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்கத்கது. 

Leave a Reply