சஜித் பிரேமதாச மற்றும் அனுர திஸாநாயக்கவை விட ரணில் விக்ரமசிங்கவே அதிபர் பதவிக்கு சிறந்தவர் என நிபுணத்துவ ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச மிகவும் முட்டாள்தனமான நபர் எனவும், அவருடன் பழகியதன் மூலம் அதனை உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இரவில் பாதுகாவலர்களுடன் குளிக்கும் சஜித்
சஜித் பிரேமதாச மேடையில் கூறுவது போல் இரவு வேலை செய்பவர் அல்ல என்றும், பாதுகாவலர்களுடன் நீச்சல் குளத்தில் குளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரைத்த மாவை அரைக்கும் அநுர குமார
அனுர திஸாநாயக்க, மக்கள் ஏற்கனவே அறிந்த திருட்டு மோசடிகளை மட்டுமே எப்பொழுதும் கூறி வருவதாகவும் மற்றபடி அவர்களுக்கு பொருளாதாரம் அல்லது நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் புதிய சிந்தனைகள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
