சிறப்பு அணுசக்தி பொருட்கள் மற்றும் பிற கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோத கடத்தலைக் கண்டறிந்து தடுக்க அமெரிக்காவுடன் இலங்கை அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து அதிகரித்து வரும் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிறப்பு அணுசக்தி பொருட்கள் மற்றும் பிற கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோத கடத்தலைக் கண்டறிந்து தடுக்க அமெரிக்காவுடன் இலங்கை அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அமெரிக்க தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்துடன் இலங்கை கடற்படை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கடந்த புதன்கிழமை கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் கையெழுத்திட்டது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக வியாழக்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.