இந்தியா – கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள உணவகத்தில் குண்டு வெடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இக்குண்டு வெடிப்பு சம்பவம் இன்று (1.3.3024) பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கபே’ என்ற உணவகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் வெடித்தது வெடிகுண்டு தான் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மேலும் குண்டு வெடிப்பு தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என துணை முதல்வர் டிகே சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொலிஸார் தீவிர விசாரணை
இந்தக் குண்டுவெடிப்பில் 9 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடித்தது குண்டு தான் என பொலிஸார் உறுதி செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சி பதிவை பொலிஸார் வெளியிட்டு உள்ளனர். குண்டு வைத்த நபர் குறித்து கர்நாடகா பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.