Headlines

கனடாவின் முன்னாள் பிரதமர் பிறயன் முல்ரொனி காலமானார்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கனடாவின் முன்னாள் பிரதமர் பிறயன் முல்ரொனி தனது 84ம் வயதில் காலமானார். கனடாவின் 18ம் பிரதமராக முல்ரொனி கடமையாற்றியுள்ளார்.

குபெக் மாகாணத்தின் Baie-Comeau ல் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பமொன்றில் முல்ரொனி பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் ஜோன் டெபின்பேர்க்கரின் ஆலோசகர் என்ற அடிப்படையில் முல்ரொனி தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.

கனடாவின் முன்னாள் பிரதமர் பிறயன் முல்ரொனி காலமானார் | Former Prime Minister Brian Mulroney Dies

1983ம் ஆண்டு கொன்சர்வடிவ் கட்சியின் தலைவராக தெரிவாகிய முல்ரொனி, 1984ம் ஆண்டில் கனடாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

முல்ரொனி தனது பதவிக் காலத்தில் நாட்டில் பல்வேறு மாற்றங்களை செய்தவர் என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் புகலிடம் கோரி முதல் தடவையாக கப்பலில் கனடா வந்தடைந்த நாட்டின் பிரதமராக முல்ரொனி பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மை சமூகங்களுக்கு நீதி வழங்கும் விவகாரத்தில் முல்ரொனி சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தார் என பாராட்டப்படுகின்றது. 

Leave a Reply