இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜய் டபுள் ரோலில் நடிக்கும் GOAT படத்தை இயக்கி வருகிறார். ஷூட்டிங் பல்வேறு நாடுகளில் நடந்த நிலையில் அடுத்தகட்ட ஷூட்டிங் ரஷ்ய நாட்டில் நடைபெற இருக்கிறது.
விஜய் அரசியலில் நுழைந்திருப்பதால் GOAT மற்றும் இன்னும் ஒரு படம் மட்டும் நடித்து கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருந்தாலும் GOAT மீது பெரிய எதிர்பார்ப்பையும் வைத்து வருகின்றனர்.

வெங்கட் பிரபுவை திட்டிய விஜய் ரசிகர்
GOAT படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்போது வரும் என சொல்லுங்கள் என வெங்கட் பிரபுவை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
ஒரு ரசிகர் கொஞ்சம் எல்லை மீறி போய் வெங்கட் பிரபுவை கெட்ட வார்த்தைகளில் திட்டி இருக்கிறார்.
“சொல்லலாம்னு நெனச்சேன். இப்போ இதுக்கு மேல எப்படினு நீங்களே சொல்லுங்க விஜய்னா bloods” என கேட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.