Headlines

சாந்தனைப்போன்றே ஈழத்தமிழருக்காக சீனிவாசன் மரணமடைந்தது தெரியுமா?

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 32 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டு கடந்த (28.02.2024) ஆம் திகதி கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தாயகக் கனவைச் சுமந்து, தனது இருபது வயதில் தாய்நிலம் பெயர்ந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு 32 ஆண்டுகள் சிறைமீளப் போராடி, விடுதலையான பின்னரான இறுதி ஒன்றரை ஆண்டுகள் தாய்நிலம் திரும்பப் போராடி, அந்த ஏக்கம் தீராமலேயே சாந்தன உயிருந்துள்ளார்.

இருபது வயது இளைஞனாக சிறைசென்ற தன்மகன், என்றோ ஓர் நாள் தாய்மடி சேர்வான் என்ற, சாந்தனின் தாயாரின் 33 வருடக் காத்திருப்பு பொய்த்துப்போய்விட்டது.

சாந்தனைப்போன்றே ஈழத்தமிழருக்காக சீனிவாசன் மரணமடைந்தது தெரியுமா? | Srinivasan Died In India

சாந்தனைப்போன்றே ஈழத்தமிழருக்காக தமிழ்நாடு வேலூர் வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழர் சீனிவாசன் என்பவரும் சாந்தன் மரணமான  28ம் திகதி 2009ல் ஈழத் தமிழர்களுக்காக சீனிவாசன் தீக்குளித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன் சிகிச்சை பலனின்றி 02.03.2009ல் இறந்ததாக தமிழக அரசு தெரிவித்தது.

இவ்விரு தமிழர்களின் மரணம் நிகழ்ந்த அதாவது 2009, 2024ல் தமிழகத்தில் ஆட்சியில் திமுக ஆட்சியில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயம் என முகநூல் விமர்சகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

ஈழத் தமிழருக்காய் தன்னை ஆகுதியாக்கிய சீனிவாசனுக்கு இன்றுடன் 15வது நினைவுதினம் ஆகும். அவருக்கு எமது நினைவஞ்சலிகள்.

Leave a Reply