மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் நாடாளுமன்றத்திற்கான மின் விநியோகத்தை அந்நாட்டு மின்சார நிறுவனம் துண்டித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கானா நாடாளுமன்றத்தில் அதிபர் நானா அகுஃபோ–அட்டோ நாட்டு மக்களுக்கு உரையாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக மின்சாரம் வழமைக்குத் திரும்பும் என நினைத்து உறுப்பினர்கள் அமர்ந்திருந்த நிலையில், மின்சாரத்தடை நீடித்தது.
இதையடுத்து, அங்கிருந்து உறுப்பினர்கள் அனைவரும் அக்கன் மொழியில் “மின்சார தடை” எனும் பொருள்பட “டம்சர், டம்சர்” என கோஷமிடத் தொடங்கினர்.

சில நிமிடங்கள் கடந்ததும், உறுப்பினர்கள் அமர்ந்திருந்த சபைக்கு மட்டும் ஜெனரேட்டர் உதவியுடன் மின்சாரம் கிடைத்தது.
ஆனால், நாடாளுமன்றத்தின் பிற பகுதிகளுக்கு மின்சாரம் வரவில்லை.