அமெரிக்காவில் லீப் ஆண்டில் பிப்ரவரி 29ஆம் திகதியன்று தாய்க்கும் சேய்யும் பிறந்நாள் கொண்டாடவுள்ள சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் நார்த் கரோலைனாவைச் (North Carolina) சேர்ந்த டாக்டர் காய் சுன்னுக்கும் (Kai Sun) அவரது மகளுக்கும் ஒரே பிறந்தநாள் கொண்டாடவுள்ளனர்.

அதில் சுவாரசியம் என்னவெனில் இருவரும் லீப் ஆண்டில் பிப்ரவரி 29ஆம் தேதியன்று பிறந்தவர்கள். 40 வயது காய் சுன்னுக்கு இந்த வாரம் (29 பிப்ரவரி) பெண் குழந்தை பிறந்துள்ளது
அவரது மகளுக்கு குலோயி (Chloe) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. “என்னைப் போலவே எனது மகளும் லீப் நாளில் பிறந்தால் நன்றாக இருக்குமென நானும் எனது கணவரும் பேசியிருந்தோம். நினைத்தது போலவே எங்கள் அன்பு மகள் பிப்ரவரி 29ஆம் திகதி பிறந்துவிட்டாள்!”என காய் சுன் மகிச்சியுடன் தெரிவித்தார்.

பிப்ரவரி 26ஆம் தேதி பிறக்கவேண்டிய குலோயி 3 நாள்கள் கழித்து பிப்ரவரி 29ஆம் தேதி பிறந்திருக்கிறார்.
இந்நிலையில் தாயும் சேயும் ஆரோக்கியமாய் இருப்பதாக கூறப்படுகின்ற அதேவேளை காய் சுன்னுக்கும் அவரது கணவர் மைக்கலுக்கும் (Michael) மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.