Headlines

இஸ்ரேலின் சரமாரி தாக்குததலில் காசாவில் மேலும் 90 பேர் உயிரிழப்பு

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

 இஸ்ரேலில் கொடூர தாக்குதலில் காசாவில் மேலும் 90 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் கடந்த அக்டோபர் ஆம் திகதி தொடங்கி சுமார் 5 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மக்கள் உணவு நீர் இன்றி தவிக்கின்றனர்.

இஸ்ரேலின் சரமாரி தாக்குததலில் காசாவில் மேலும் 90 பேர் உயிரிழப்பு | Israel S Barrage Kills 90 More In Gaza

இந்நிலையில் போரை நிறுத்துவதற்கு கத்தார் உள்ளிட்ட பல நாடுகள் சமரச முயற்சி செய்தன. எனினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்தநிலையில் காசாவை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் பலியாகினர். மேலும் 177 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

அதேவேளை  இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 410 ஆக உயர்ந்ததுடன்   இதுவரை சுமார் 71 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்ததாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply