Headlines

ஜெர்மனியில் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி! பலர் காயம்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

ஜெர்மனியில் முதியோர் காப்பகம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஜெர்மனியில் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி! பலர் காயம் | Fire At Nursing Home In Germany 4 People Death

ஜெர்மனி – மேற்கே வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தில் பெட்பர்க்-ஹாவ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த காப்பகத்தில் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஜெர்மனியில் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி! பலர் காயம் | Fire At Nursing Home In Germany 4 People Death

தீ விபத்து தொடர்பில் அறிந்தத பொலிஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் குறித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனியில் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி! பலர் காயம் | Fire At Nursing Home In Germany 4 People Death

தீ விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.  

Leave a Reply