Headlines

“அன்பான திருடரே” என கார் கண்ணாடியில் கடிதம் வைத்த வினோத நபர்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

 கனடாவில் திருடர்களுக்காக கார் கண்ணாடியில் கடிதம் ஒன்றை எழுதி வைத்த வினோத நபர் பற்றிய தகவல் பதிவாகியுள்ளது.

ரொறன்ரோவைச் சேர்ந்த கார் உரிமையாளர் ஒருவரே இவ்வாறு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

குறித்த நபரின் வாகனம் மூன்று தடவைகள் உடைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

“அன்பான திருடரே” என கார் கண்ணாடியில் கடிதம் வைத்த வினோத நபர் | Sign Car Window Toronto Thieves

நான்காம் தடவையாக வாகனம் உடைக்கப்படுவதனை தடுக்கும் நோக்கில் குறித்த நபர் இவ்வாறு கடிதம் எழுதி ஒட்டியுள்ளார்.

“அன்பான திருடரே, தயவு செய்து கார் கண்ணாடியை உடைக்க வேண்டாம், வாகனத்தின் கதவு திறந்தே உள்ளது. உங்கது நாள் நல்ல நாளாக அமையட்டும்” என கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

ரொறன்ரோவில் அதிகளவில் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த கடிதம் எழுதப்பட்ட வாகனம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காணொளியை பார்த்த பலரும் மனம் நெகிழ்ந்து பதிவுகளை இட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply