Headlines

9 வயது சிறுமி கொடூர கொலை; கொந்தளித்த மக்கள்; நடந்தது என்ன?

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

இந்தியா புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த நிறுமியின் உடலை கால்வாயில் வீசிய கொடூர சம்பவத்தால் இந்தியாவே ஆடிப்போயுள்ளது.

இந்தியாவின் புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பள்ளி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரின் மகள், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

9 வயது சிறுமி கொடூர கொலை; கொந்தளித்த மக்கள்; நடந்தது என்ன? | Puducherry 9 Year Old Girl Sexually Assaulted

உடலை கால்வாயில் வீசிய கொடூரம்

கடந்த மார்ச் 2ம் தேதி மதியம் 2 மணியளவில் மாணவி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல்போயுள்ளார். சிறுமியை தேடியும் அவர் எங்கும் காணததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், முத்தியால்பேட்டை பொலிஸில் , மார்ச், 2ல் புகார் அளித்தனர்.புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்

சிறுமியை தேடும் நடவடிக்கையை முடுக்கிவிடப்பட்டு முத்தியால்பேட்டை பொலிஸார் 100 இற்கும் மேற்பட்ட சீசிரி கேமேராக்களை ஆராய்ந்தபோது, ஒரே ஒரு கேமராவில் மட்டும் அப்பகுதியில் சிறுமி ஒருவர் தனியாக நடந்து செல்லும் காட்சி இருந்தது.

இதனிடையே, மாணவிக்கு ஏதோ ஆகிவிட்டதோ என அச்சமடைந்த பெற்றோர் உள்ளைட்ட பிரதேச மக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் சிறுமி வேறு எங்கும் செல்ல வாய்ப்பில்லை என்றும், அப்பகுதியில் சோதனை நடத்த வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

முட்புதர்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி சுமார் 72 மணி நேரத்திற்கு பிறகு, மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள அம்பேத்கர் நகர் வாய்க்காலில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. பொலிஸார் வாய்க்காலில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியை மீட்ட பொலிஸார், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

9 வயது சிறுமி கொடூர கொலை; கொந்தளித்த மக்கள்; நடந்தது என்ன? | Puducherry 9 Year Old Girl Sexually Assaulted

ஆவேசமான  மக்கள்

அப்போது ஆம்புலன்சை செல்ல விடாமல் தடுத்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. . இதற்கிடையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சிறுமியின் மரணத்தில் சந்தேகத்தின் பேரில் ஒரு முதியவர் மற்றும் மூன்று இளைஞர்களை பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனிடையே, குற்றவாளிகளை ஒப்படைக்கக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் புதுச்சேரி மாநகரம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பானது. இந்நிலையில், சிறுமியை கொலை செய்த வழக்கில் கருணாஸ் என்ற 19 வயது இளைஞரும், விவேகானந்தன் என்ற 60 வயது நபரும் கைது செய்யப்பட்டனர்.

இதில் சந்தேகநபரான் கருணாஸ் என்ற வாலிபர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் பெண் தேட வந்தார் ஆனால் போலீசாரின் விசாரணையில் கருணாஸ் சிக்கியுள்ளார்.

கருணாஸ் விவேகானந்தன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால் சிறுமி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்ற புகாரின் கீழ் இரண்டு பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சிறுமி வன்புனர்வுகுட்படுத்தப்பட்டு கொலஒ செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply