Headlines

கனடாவில் துப்பாக்கிச்சூடு ; இலங்கையை சேர்ந்த 6 பேர் வீட்டில் சடலமாக மீட்பு

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது , தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கனடாவில் துப்பாக்கிச்சூடு ; இலங்கையை சேர்ந்த 6 பேர் வீட்டில் சடலமாக மீட்பு | Shooting In Canada 6 People Death Homes

புதன்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 22:52 மணிக்கு (03:52 GMT) அவசர அழைப்புக்கு அதிகாரிகள் பதிலளித்தனர், அப்போது அவர்கள் ஆறு பேரைக் கண்டுபிடித்தனர்.

ஒட்டாவா காவல்துறைத் தலைவர் எரிக் ஸ்டப்ஸ் இந்த சம்பவத்தில் “வெகுஜன துப்பாக்கிச் சூடு” பிரயோகிக்கப்பட்டுள்ளதாக  விவரித்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply