Headlines

பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து; இருவர் உயிரிழப்பு

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

மெக்ஸிக்கோ பல்கலைக்கழகத்தில் இளைஞனொருவன் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் இரு பெண்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குவாதலாஹாரா நகரிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் புதன்கிழமை (06) இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

20 வயதான ஓர் இளைஞனே தாக்குதல் நடத்தியதாகவும், இளைஞனும் சம்பவத்தில காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலுக்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை என ஜாலிஸ்கோ மாநில வழக்குத்தொடுநர் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான இளைஞனை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Leave a Reply