Headlines

கனடாவில் விபத்து ; மூடப்பட்டுள்ள 401 நெடுஞ்சாலை

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கனடா – டொராண்டோவில் காகிதம் கொண்டு செல்லும் டிரக் ரக வாகனம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததால், டொராண்டோவில் உள்ள நெடுஞ்சாலை 401யின் பரபரப்பான பகுதி மூடப்பட்டிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்தானது நேற்று(08) இடம்பெற்றதோடு, வாகன சாரதி எந்த வித பாதிப்பும் இன்றி மீட்கப்பட்டதாக டொராண்டோ தீயணைப்பு சேவை கூறியுள்ளது.

டொராண்டோவின் நெடுஞ்சாலை 401 இன் மேற்கு நோக்கி செல்லும் அனைத்து அதிவேக பாதைகள் நேற்று(08) காலையில் பல மணி நேரம் மூடப்பட்டிருந்ததுடன் காலை 9:30 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் விபத்து ; மூடப்பட்டுள்ள 401 நெடுஞ்சாலை | Accidents In Canada Highway 401 Closed

இந்நிலையில் சுமார் 20 தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அத்தோடு, தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டமையை அடுத்து வாகனத்தை அப்புறப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply