Headlines

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் அழகிய குழந்தை பெற்றெடுத்த பெண்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

ஜார்டன் நாட்டில் இருந்து பிரித்தானிய தலைநகர் லண்டனை நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவருக்கு குழந்தையை பெற்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விமானத்தில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவர் ஹாசன் கான் பிரசவம் பார்த்துள்ளார்.

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் அழகிய குழந்தை பெற்றெடுத்த பெண்! | Woman Gave Birth Beautiful Baby On Mid Air Flight

சுமாராக 2 மணித்தியால விமான பயணத்தின் போது விமானத்திற்குள் மருத்துவ அவசர நிலை உருவானது.

இதையடுத்து விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் ஹாசன் கானிடம் விமான குழுவினர் உதவி கோரினர்.

உடனே உதவ முன்வந்த மருத்துவர், பெண் ஒருவருக்கு பனிக்குடம் உடைந்து பிரசவத்திற்கான அறிகுறி உறுதி செய்யப்பட்டது.

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் அழகிய குழந்தை பெற்றெடுத்த பெண்! | Woman Gave Birth Beautiful Baby On Mid Air Flight

இதை பார்த்த மருத்துவர், உடனே பிரசவ பணிகளை துவங்கினார். மருத்துவரின் உதவியால் 38 வயதான பெண் அழகிய பெண் குழந்தையை பிரசவித்துள்ளார்.

வர்த்தக விமானம் ஒன்றில் பிறந்த 75-வது குழந்தை இது என கூறப்படுகிறது.

குழந்தை பிறந்ததை அடுத்து விமானம் அருகாமையில் உள்ள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

அங்கிருந்து குழந்தையை பெற்றெடுத்து பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

இது தொடர்பில் பேசிய மருத்துவர்,

“விமானம் வேறு பாதையில் திருப்பப்பட்டதால், எனது பணிக்கு செல்ல தாமதமாகி விட்டது. தாமதத்திற்கான காரணத்தை அறிந்த எனது உயர் அதிகாரி என்னை பாராட்டினர்,” என்று தெரிவித்தார்.

Leave a Reply