கனடாவின் மிஸ்ஸிசாகாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இன்றைய தினம் அதிகாலை வீடு ஒன்றில் இந்த தீ விபத்து பதிவாகியுள்ளது.
மிஸ்ஸிசாகாவில் புரொம்ஸ்க்ரோவ் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இவ்வாறு விபத்து நேர்ந்துள்ளது.

தீ விபத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டிலிருந்த நாயும் தீ விபத்தில் உயிரிழந்து விட்டதாகவும், பூனை ஒன்றை தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர்.