Headlines

கனடாவில் மெக்டொனால்ட் சென்ற ரக்கூன்!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கனடாவின் ஸ்காப்ரோவில் அமைந்துள்ள மெக்டொனால்ட்ஸ் உணவு கடையொன்றிற்குள் ரக்கூன் ஒன்று உலவும் காணொளி வைரலாகியுள்ளது.

பொதுவாக இவ்வாறான ரக்கூன்கள் குப்பை தொட்டிகளில் எஞ்சியிருக்கும் கழிவு வகைகளையே உட்கொள்ளும்.

எனினும், இந்த ரக்கூன் நேரடியாக கடைக்குச் சென்று உலவும் காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன.

கனடாவில் மெக்டொனால்ட் சென்ற ரக்கூன்! | Raccoon Mcdonalds Scarborough Viral Video

கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் இந்த ரக்கூனை கணொளியாக பதிவிட்டுள்ளனர். கடையில் ஒருவர் பர்கர் ஒன்றை ரக்கூனுக்கு வழங்குமாறு கூறுகின்றார்.

எவ்வாறெனினும் இவ்வாறான விலங்குகளை கடைக்குள் நுழைய விடுவது உசிதமானதல்ல

கனடாவின் வனவிலங்கு சட்டத்தின் பிரகாரம் வன விலங்குகளுக்கு உணவு வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த வகை விலங்குள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவக்கூடிய அபாயங்களும் காணப்படுகின்றன. 

Leave a Reply