Headlines

சிஸ்கேவின் அடுத்த தலைவர் யார்! நிர்வாகம் எடுத்துள்ள முடிவு

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

ஐபிஎல் 2024 ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் எதிர்கால திட்டம் பற்றி அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.

தோனியின் கடைசி சீசன் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அவருக்கு பின்னர் அணியின் தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியை தோனியே வழிநடத்துவார் என்று காசி விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த அணித்தலைவர்

அதேவேளை சிஸ்கே அணியின் புதிய அணித்தலைவரை தெரிவு செய்ய அவசரப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளதுடன் சென்னை அணியின் பயிற்சியாளரும் தோனியும் சேர்ந்து தான் இதனை பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்று நிர்வாகிகள் தரப்பு விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

சிஸ்கேவின் அடுத்த தலைவர் யார்! நிர்வாகம் எடுத்துள்ள முடிவு | Replace Ms Dhoni Csk Captain Ceo Big Revelation

அணித்தலைவர் உட்பட முதன்மையான இரு பொறுப்புகள் குறித்து நாம் விவாதிக்க தேவையில்லை, அதை தோனியும் பயிற்சியாளரும் முடிவு செய்யட்டும் அவர்கள் முடிவை தம்மிடம் தெரிவிக்கட்டும், அதை உங்களுக்கு தெரிவிப்பேன் என ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளதாக விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

 சிஎஸ்கே அணி முன்பு ரவீந்திர ஜடேஜாவை அணித்தலைவராக நியமித்திருந்த நிலையில் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. எனவே மீண்டும் அணித்தலைவராக தோனியே களமிறங்கினார்.

ஐபிஎல் 2024 இம்மாதம் 22 ஆரம்பமாகவுள்ளதோடு அன்று சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.

Leave a Reply