யாழ்.பண்ணை கடலினுள் கோப்பாய் பொலிஸாரின் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தாகது நேற்று(13.03.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணைக்காக சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டி மீட்பு
இதன்போது கடலினுள் பாய்ந்த முச்சக்கரவண்டியானது உழவு இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாரே அதிக வேகத்தில் ஆபத்தான விதத்தில் பயணம் செய்யும் நிலையில் பொதுமக்களை எவ்வாறு அவர்கள் நல்வழிப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளதா தெரிவிக்ப்படுகிறது.