Headlines

எரிபொருள் பவுசருடன் பேருந்து மோதி பயங்கர விபத்து… 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ல ஹெல்மண்ட் மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் பவுசருடன் மோதி கவிழ்ந்து தீப்பிடித்ததில் விபத்து சம்பவித்துள்ளது.

எரிபொருள் பவுசருடன் போருந்து மோதி பயங்கர விபத்து... 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | Bus Collision Fuel Bowser 21 Death Afghanistan

இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 38 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது, பயணிகள் பேருந்து ஹெராட் (Herat) நகரில் இருந்து தலைநகர் காபூல் (Kabul) நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

முதலில் மோட்டார் சைக்கிளை மோதிய பேருந்து பின்னர் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த எண்ணெய் லாரியை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஹெல்மண்ட் மாகாண பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply