Headlines

பிரித்தானியாவில் அரைக் கம்பத்தில் பறந்த தேசிய கொடி; இளவரசி கேட் இறந்துவிட்டதாக போலி செய்தி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

பிரித்தானியாவின் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறப்பது போன்ற புகைப்படம் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக பிரித்தானிய இளவரசி  கேட் தொடர்பில் பல சர்ச்சை கருத்துக்கள் பரவி வந்த நிலையில், தற்பேது தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறப்பது போன்ற புகைப்படம் வெளியாகி மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள்தெரிவித்துள்ளன.

பிரித்தானியாவில் அரைக் கம்பத்தில் பறந்த தேசிய கொடி; இளவரசி கேட் இறந்துவிட்டதாக போலி செய்தி | Fake News That Princess Kate Is Dead

போலியான  புகைப்படம்

இளவரசர் சார்லஸ், மன்னரானதைத் தொடர்ந்து, இளவரசர் வில்லியமுக்கு வேல்ஸ் இளவரசர் என்னும் பட்டம் கொடுக்கப்பட்டதனால் , இளவரசி கேட், வேல்ஸ் இளவரசியானார். இளவரசி கேட், பாதுகாவலர்களின் Colonel of the regiment என்னும் பொறுப்பை வகிக்கிறார்.

நேற்று St Patrick’s Day தினத்தையொட்டி, Irish Guards பாதுகாவலர்களின் அணிவகுப்பு நடந்தது. எனினும் அதில் இளவரசி கேட் கலந்துகொள்ளவில்லை. அதேசமயம் இளவரசி அங்கு இல்லாதபோதும் , வீரர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் அரைக் கம்பத்தில் பறந்த தேசிய கொடி; இளவரசி கேட் இறந்துவிட்டதாக போலி செய்தி | Fake News That Princess Kate Is Dead

இந்நிலையில் St Patrick’s Day தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததால், இளவரசி கேட் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறந்ததையும் இளவரசி அணிவகுப்பில் கலந்துகொள்ளாததையும் சிலர் இணைத்து, இளவரசி கேட் இறந்துவிட்டார்.

அதனால் தான் பிரித்தானிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கின்றது சமூகவலைத்தளத்தில் வெளியான பதிவுகளால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து , எக்ஸின் Fact check குழுவினர் கொடி குறித்த உண்மையை ஆராய்ந்தபோது, அது மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரிய வந்துள்ளது.

Leave a Reply