யாழ். இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் நீராடச் சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் (20-03-2024) சேந்தாங்குளம் கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கடற்கரைக்கு நீராட சென்ற மூவரில் இருவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.