சீரற்ற காலநிலையினால் ரொறன்ரோவில் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவின் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் 17 வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.
கடுமையான பனிப்பொழிவு நிலைமையினால் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் பனிக்கால சீரற்ற காலநிலை குறித்த பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. பகல் வேளையில் பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதிகளவில் பனிப்பொழிவு ஏற்படாது எனவும் அதிகபட்சமாக நான்கு சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு நிலைமையானது தெற்கு நோக்கி நகர்வதனால் போக்குவரத்தில் ஈடுபடுவதில் சவால்களை எதிர்நோக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில இடங்களில் பனிமூட்டம் காரணமாக முழுமையாகவே பாதைகள் தெரியாது போகும் சந்தர்ப்பங்கள் உண்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எக்லிங்டன் அவன்யூ பகுதியில் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 17 வாகனங்கள் மோதிக் கொண்டுள்ளன.
இதனால் சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.