Headlines

அமேசான் மலைக்காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நதி டால்பின் மண்டை ஓடு!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

அமேசான் மலைகாட்டில் மிகப்பெரிய நதி டால்பின் மண்டை ஓட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கண்டுபிடிக்கப்பட்ட  நதி டால்பின் மண்டை ஓட்டை 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவின் அமேசான் நதிகளில் தஞ்சமடைந்ததாகக் கருதப்படும் பெபனிஸ்டா யாகுருனா என்ற டால்பின் இனத்தில் சேர்ந்து என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த டால்பின் 3.5 மீட்டர் நீளம் வரை இருந்திருக்கும் என்றும், இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நதி டால்பின்களில் இது மிகப்பெரிய டால்பின் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய இனத்தின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, உலகின் எஞ்சியிருக்கும் நதி டால்பின்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களை உணர்த்துகிறது.

அமேசான் மலைக்காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நதி டால்பின் மண்டை ஓடு! | Largest River Dolphin Skull Find Amazon Forest

இந்த நதி டால்பின்கள் அடுத்த 20 முதல் 40 ஆண்டுகளில் இதேபோன்ற அழிவை சந்திக்கும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர் ஆல்டோ பெனிட்ஸ்-பாலோமினோ தனது ஆய்வு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள்து.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டால்பின் இனம், 24 மில்லியன் முதல் 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல்களில் பொதுவாகக் காணப்பட்ட டால்பின்களின் பிளாட்டானிஸ்டோய்டியா குடும்பத்தைச் சேர்ந்தது என்று ஆல்டோ பெனிட்ஸ்-பாலோமினோ தெரிவித்தார். 

Leave a Reply