இந்தையா மற்றும் இலங்கை இடையே நில வழித்தடத்தை அமைப்பது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விவரித்துள்ளார்.
iஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுடனான இலங்கை – இந்திய சங்கத்தின் வருடாந்த இரவு விருந்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

காற்று, கடல், வர்த்தகம், டிஜிட்டல், ஆற்றல்
புதுடில்லி அண்மைய காலமாக முன்னெடுத்துள்ள அரசியல் நகர்வுகளை சுட்டிக்காட்டிய அவர் , காற்று, கடல், வர்த்தகம், டிஜிட்டல், ஆற்றல் மற்றும் மக்களுக்கு இடையிலான இணைப்பு குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தார்.
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையேயான விமான சேவைகள் மற்றும் இந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையில் படகு சேவைகளை ஆரம்பிப்பது குறித்தும் கூறியுள்ளார்.

அதேசமயம் இந்தியா-இலங்கை நில இணைப்பு வழித்தடமாக இருக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுபடுத்த முடியும் எனவும், மக்களின் வளர்ச்சி மற்றும் செழுமையின் புதிய சகாப்தமாக மாறும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கூறியுள்ளார்.