Headlines

கனடாவில் குடியேறுவோருக்கான முக்கிய அறிவுறுத்தல்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கனடாவில் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய அட்லாண்டிக் பேரவை குடியேறிகள் தொடர்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கனடாவிற்குள் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பிரஜைகளினால் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என அந்தப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

கனடாவில் குடியேறுவோருக்கான முக்கிய அறிவுறுத்தல் | Canada Immigerents

இதனால் குடியேறும் சில ஆண்டுகளில் அவர்கள் வேறும் நாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கி விடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ம் அண்டில் குடியேறிகளின் எண்ணிக்கை 6000 மாக காணப்பட்டதாகவும், 2023ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 32000 மாக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசிக்கும் குடியேறிகளில் 50 வீதமானவர்கள் மட்டுமே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கனடாவில் தாக்குப் பிடிக்கின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீடமைப்பு, மருத்துவ சேவை, கல்வி வசதி, பாடசாலை வசதி போன்ற சில காரணிகளினால் குடியேறிகள் தொடர்ச்சியாக கனடாவில் வாழ்வதற்கு விரும்புவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் போர் காரணமாக உக்ரைனிலிருந்து கனடாவின் நோவா ஸ்கோடியாவில் குடியேறிய பெண் ஒருவர் வாழ்க்கைச் செலவு பிரச்சினை காரணமாக கனடாவை விட்டு வெளியேறி, ஜோர்ஜியாவில் குடியேறியுள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டில் கனடாவில் குடியேறிய டிடென்யா மெலினெக் என்ற பெண்ணே இவ்வாறு கனடாவை விட்டு வெளியேறியுள்ளார்.

வாழ்க்கைச் செலவு பிரச்சினை காரணமாக இவ்வாறு கனடாவை விட்டு வெளியேறியதாகத் தெரிவித்துள்ளார்.  

எனவே கனடாவிற்குள் குடியேறுவோர் இந்தக் காரணிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி சரியான திட்டமிடலுடன் குடியேறுவது பொருத்தமானது என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply