Headlines

மொங்கோலியாவில் ஐந்து மில்லியன் விலங்குகள் உயிரிழப்பு

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கிழக்காசியா நாடான மொங்கோலியாவில் கடுமையான குளிர்காலம் காரணமாக ஐந்து மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மொங்கோலியா மிகவும் கடுமையான குளிரில் சிக்குப்பட்டு உறைந்துபோயுள்ளதுடன், 4.7 மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உணவு விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மொங்கோலியாவில் ஐந்து மில்லியன் விலங்குகள் உயிரிழப்பு | Five Million Animals Died In Mongolia

உணவுக்கு திண்டாடும் மக்கள்

மொங்கோலியாவில் வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளது கடும் பனி காணப்படுகின்றது . மேய்ச்சல் நிலங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன கால்நிலைகள் உணவிற்காக அலைகின்றன என செஞ்சிலுவை சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மங்கோலியாவில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நாடோடிகள் மற்றும் கால்நடை மேய்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் உணவுக்காகவும் சந்தைகளி;ல் விற்பனை செய்வதற்காகவும் அவர்கள் கால்நடைகளை நம்பியுள்ளனர்.

மொங்கோலியாவில் ஐந்து மில்லியன் விலங்குகள் உயிரிழப்பு | Five Million Animals Died In Mongolia

தங்கள் வாழ்க்கைக்காக கால்நடைகளை முற்றாக நம்பியுள்ள மக்கள் கடும் குளிர்காலம் காரணமாக ஒரு சிலமாதங்களில் ஆதரவற்றவர்களாக மாறிவிட்டனர் என சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய இயக்குநர் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் சிலர் தங்களிற்கான உணவைபெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தங்கள் வீடுகளில் குளிரை போக்குவதற்காக எரியூட்ட முடியாத நிலையில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கால்நடைமேய்ச்சலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களில் 2250க்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் கால்நடைகளில் 70 வீதத்திற்கும் அதிகமானவற்றை இழந்துவிட்டதாகவும், 7000ம் குடும்பங்கள் போதிய உணவை பெற முடியாத நிலையில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடும் குளிரான இந்த காலநிலை நீடிக்கலாம் என்ற அச்சம் வெளியாகியுள்ளது.    

Leave a Reply