ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ அருகே குரோகஸ் சிட்டி ஹால் என்ற இசை அரங்கில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 4 பேர் உள்பட தாக்குதலில் தொடர்புடைய 11 பேரை கைது செய்துள்ளதாக ரஷிய காவல்துறை தெரிவித்துள்ளது.
6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
அப்போது அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும் அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தியது.

தீ வேகமாக பரவியதால் இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் 115 பேர் உயிரிழந்தனர். மேலும் 145 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் 115 பேர் உயிரிழந்தனர். மேலும் 145 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.