Headlines

முல்லைத்தீவில் சகோதரியின் கணவனால் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர் புரம் பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவர் அவரது சகோதரியின் கணவனால் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த (20.03.2024) அன்று ஆறுமாத கர்ப்பம் தரித்த நிலையில் வவுனியா மாவட்ட மருத்துவமனைக்கு சென்ற போது குறித்த குற்றச்செயல் வெளிவந்துள்ளது.

சட்ட ரீதியான நடவடிக்கை

புதுக்குடியிருப்பு – வள்ளுவர் புரம் பகுதியில் சிறுமி தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

சிறுமியின் சகோதரியின் குடும்பம் பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கம் சகோதரியின் கணவனுடன் தொலைபேசியில் உரையாடி வந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சகோதரியின் கணவன் சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உற்படுத்தியுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவில் சகோதரியின் கணவனால் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி | 15Years Girl Abuesd Her Sisters Husband Mullaitivu

இந்தநிலையில் அன்று இரவே சிறுமியை அழைத்துக்கொண்டு சகோதரியின் கணவன் பட்டமுறிப்பு பகுதியில் திருமணமாகாத நிலையில் தம்பதியாக வாழ்ந்து வந்துள்ளார்களதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளால் உரிய திணைக்களங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் சகோதரியின் கணவனால் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி | 15Years Girl Abuesd Her Sisters Husband Mullaitivu

அத்துடன் சிறுமியை கர்ப்பம் தரிக்க வைத்த சகோதரியின் கணவன் கைது செய்யப்பட்டதுடன் சட்ட ரீதியான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply