Headlines

அமெரிக்காவில் பயங்கரம்; வீடுகளுக்குள் புகுந்து மர்மநபர் சரமாரி கத்திக்குத்து!

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

அமெரிக்காவின் இல்லி னாய்ஸ் மாகாணம் ராக்போர்ட் பகுதியில் மர்மநபர் ஒருவர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்தது விரைந்து சென்ற பொலிஸார், கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மீட்டனர். எனினும் இந்த தாக்குதலில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தனர்.

அமெரிக்காவில் பயங்கரம்; வீடுகளுக்குள் புகுந்து மர்மநபர் சரமாரி கத்திக்குத்து! | Man Goes On Stabbing Rampage In State Of Illinois

ரத்த  வெள்ளத்தில் கிடந்த 8 பேர் – நால்வர் உயிரிழப்பு

ரத்த வெள்ளத்தில் கிடந்த 8 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேவேளை சம்பவத்தில் பலியானவர்கள், 15 வயது சிறுமி, ஒரு பெண், இரண்டு ஆண்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் பயங்கரம்; வீடுகளுக்குள் புகுந்து மர்மநபர் சரமாரி கத்திக்குத்து! | Man Goes On Stabbing Rampage In State Of Illinois

அவர்களது பெயர் விவரங்களை வெளியிடவில்லை. இதற்கிடையே கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இச்சம்பவம் குறித்து ராக்போர்ட் நகர மேயர் டாம் மெக்ன மாரா கூறும் போது, அப்பாவி மக்களுக்கு எதிரான மற்றொரு கொடூரமான இந்த வன்முறை செயலால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறையுள்ளார்.

Leave a Reply