Headlines

கனடிய அரச நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்ட பணியாளர்கள் அதிரடி நீக்கம்

Advertisements
உங்கள் பிராந்திய செய்திகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பினாள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்-admin@canadatamil.com

கனடாவின் வருமான முகவர் நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்ட பணியாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

கோவிட் பெருந்தொற்று காலப் பகுதியில் மோசடியான முறையில் நலன்புரிக் கொடுப்பனவு பெற்றுக் கொண்டவர்களே இவ்வாறு பணி நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 15ம் திகதி வரையிலான காலப் பகுதியில் கனடிய வருமான முகவர் நிறுவனத்தைச் சேர்ந்த 232 பேர் பணி நீக்கப்பட்டுள்ளனர்.

கனடிய அரச நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்ட பணியாளர்கள் அதிரடி நீக்கம் | Cra Fires 232 People For Falsely Claiming 2 000

கனடிய அவசர நிவாரணத் திட்டத்தின் கீழ் கொடுப்பனவு பெற்றுக்கொண்டவர்களே பணி நீக்கப்பட்டுள்ளனர்.

பெருந்தொற்று காரணமாக சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தொழில்களை இழந்தவர்களுக்கு அரசாங்கம் மாதாந்தம் 2000 டொலர் நலன்புரிக் கொடுப்பனவு வழங்கியிருந்தது.

வருமான முகவர் நிறுவனத்தில் பணியாற்றிய 232 பேர் இந்த கொடுப்பனவு தொகையை மோசடியாக பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் 600 பேர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply